×

பிட்காயினில் பணம் இழந்த இன்ஜினியர் தற்கொலை

வேலூர்: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன்(34), பொறியியல் பட்டதாரி. இவருக்கு காயத்ரி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். முரளிகிருஷ்ணன் வேலூர் சேண்பாக்கத்தில் அறை எடுத்து தங்கியிருந்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் செல்போன் கோபுரங்களின் தொழில்நுட்ப பராமரிப்பாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது அறைக்கு திரும்பியுள்ளார். வழக்கமாக அதிகாலை எழுந்துவிடும் பழக்கமுடைய இவரது அறை திறக்கப்படாமல் இருக்கவே சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது அறையை திறந்து பார்த்தபோது அவர் மின்விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் சடலமாக கிடந்தது தெரிய வந்தது. முரளிகிருஷ்ணன் தனது வருவாயை பிட்காயின் எனப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் முதலீடு செய்துள்ளார். இதில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த வேதனையில் தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.





Tags : Lost money on Bitcoin Engineer suicide
× RELATED ஊட்டிக்கு டிரைவராக சென்றவர் பஸ்சில் சடலமாக திரும்பினார்